Pages

Wednesday, May 29, 2024

White Fire ~ Mooji Tamil

 அன்பபே உனது ஆன்மா.

உன்னுடைய உண்மையான பெயரும் ஒவ்வொரு ஜீவராசியின் பெயரும் இதுவே! 

ஆனால், 

நீ உன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை 

உண்மையோடு பரிமாற்றம் செய்து கொள்ளவில்லை என்றால் 

உன்னால் அந்த அன்பை அறியவோ, அன்போடு இருக்கவோ இயலாது. 


ஏற்றுக்கொள்ளுங்கள் - 

என் வாழ்க்கை என் கையில் இல்லை.

அது கடவுளின் கையில் இருக்கிறது.


உன்னை அர்ப்பணித்து விடு.

கடவுளின் கோப்பையில் வாழ்ந்து விடு.

கடவுளின் சூப் கோப்பையில் ஏறிச்செல்.

கடவுளுடைய பாத்திரத்தில் 

ஒரு சிறிய பீன்ஸ் துண்டாக இருக்கவும் தயாராக இரு.

இவ்வாறு, கடவுளின் பிரசாதமாக ஆகிவிடு.

எப்படியாவது "ஆம்" என்று சொல்லி விழுங்க விடு. 


உண்மை எங்கே இருக்கிறது என்று நினைக்கிறாய்?

அது எதன் பின்னால்  மறைந்திருக்கும்?

யாரிடமிருந்து?

தயவு செய்து சொல்!



துளைக்கும் ஆன்ம விசாரம் என்னும் பிரகாசத்தில்  

தனிப்பட்ட "நான்" மறையும் வேளையில் 

அதன் மறைவை சாட்சியாக கவனிப்பது  

அப்படியே எப்போதும் போல இருக்கும் - அளவிலா இன்பம்!


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin