Pages

Wednesday, August 19, 2020

You will be at rest, when you know this.

மனமே !

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய், இதை 

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய்.

இப்பாரில் எப்போதும் எல்லாம் இறை அருளால் 

தப்பாது அணுவளவும் சரியாய்  நடப்பதாக 

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய்.

முற்போது தர்மம் என்றும் தற்போது அதர்மம் என்றும் 

முயன்றே சீர்திருத்திட முடியும் என்னாலே என்று 

அற்ப அகந்தை செருக்கால் அலையாமலே அடங்கி 

ஆண்டவன் ஆட்சியில் அதர்மமே இல்லையென்று 

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய்.

எழுந்த உன் எழுச்சியால் எண்ணம் செயல் சொல்லாக 

இயற்றிய கர்மம் எல்லாம் இறைவனை நீங்குவதே 

அழுந்தி அகமூலத்தில் அகந்தை அழிவதொன்றே 

அரிய  கிருத கிருத்ய ஆன்மா அனுபாவமென்றே 

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய்.

எப்போது நீ அறிவாயோ 

அப்போதே சாந்தி அடைவாய்.

 


Oh Mind! You will be at rest

Only when you realize this


🕯️➖🕯️➖🕯️➖🕯️


In the Universe

Everywhere  everything happens

In absolute perfection.


You will be at rest,

Only when you realize this.


By not wandering passionately with your bloated ego,

That I can reform the world by my efforts

Perceiving that

Everything in the past was righteous and everything now is awful

When you humbly give up the worthless obsessed inflated ego

Knowing that there is no imperfection 

In the kingdom of God


You will be at rest,

Only when you realize this 


Upon arising of you followed by thoughts, actions and words

Knowing that

All the deeds done by you are nothing but

Separation from God

By immersing in the depth of heart and

Dissolving the doership is the only way 

To the auspicious Self discovery


You will be able to be at rest,

Only when you realize this. 


🕯️➖🕯️➖🕯️➖🕯️


Tried to translate the song. Pardon for imperfection.

No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin