Pages

Wednesday, September 29, 2021

குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! Kabir song translation

 குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! 

என்ன யோசிக்கிற எப்போதும்?


கரை கடக்க வேணுமின்னா

படகோட்டியோட  நட்போட இருக்க வேணும் .

பற்று அற்றுப்போகுமடா  ,

பவசாகரம் கடந்து போகலாமடா .


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


காட்சி தெரிய வேணுமின்னா,

கண்ணாடியை தொடச்சு வைக்க வேணும் .

கண்ணாடியில் கரை படிஞ்சா,

காட்சி  எங்கிருந்து  கிடைக்கும்?


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! 

என்ன யோசிக்கிற எப்போதும்?


வீதியிலே கூடுது ஓர்  பெருங்கூட்டம் ,

அதை சும்மா வேடிக்கை பார்க்க போவோம்,

கூட்டமெல்லாம் கலைஞ்சு போனதும் 

அன்னம் மட்டும் தனியே  பறந்து போகும் . 


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


மனசை தேடிப் பார்த்தால்  - கபீர் இங்கே  ,

உள்ளே இருக்குது பார் வெட்டும் கத்திரிக்கோல்.

கத்திரி இணைப்பு விடுபடாவிட்டால் , 

நம்மைக்  காலன் கொண்டு  போய் விடுவான்!


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


Translated by Parameswari Kumar. 


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin